தீவிரவாதக் குழுக்களான ஐஎஸ்.ஐஎஸ் உள்ளிட்ட பல தீவிரவாதக் குழுக்களுக்கு கட்டார் நாடு ஆதரவளித்து அவற்றுக்கு பின்புலமாக இருந்து வழிகாட்டுவதாக குற்றஞ்சாட்டி குறித்த நாடுடன் பல இஸ்லாமிய நாடுகள் இன்று(05) முதல் உறவுகளை முறித்துக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஈரானுடன், கட்டார் நெருங்கிய தொடர்பைப் பேணுவதாக அந்நாடுகள் அறிவித்துள்ளன.
கட்டாருடனான போக்குவரத்தையும் துண்டிப்பதாகவும் இனிமேல் , கட்டார் நாட்டவர்கள் மேற்படி நாடுகளில் இருந்து வெளியேறவும் இரண்டு கிழமை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பானது மத்தியகிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சில வருடங்களுக்கு முன்னர் கட்டாருடனான இராஜதந்திர தொடர்புகளை மேற்படி நாடுகள் முறித்திருந்தன.
தமது உயர்ஸ்தானிகர்களை மேற்படி நாடுகள் திரும்ப அழைத்திருந்தன. எனினும் அதன்போது போக்குவரத்து துண்டிக்கப்படவில்லை. மேலும் கட்டார் நாட்டவர்களும் வெளியேறும்படி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இத்திடீர் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, சவூதி அரேபியா, எகிப்து,பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளே இவ்வாறு கட்டார் நாட்டுடன் உறவுகளை துண்டித்துள்ளது.
இன்னும், குறித்த நாடுகளில் வசிக்கும் கட்டார் நாட்டவர்களை வெளியேற இன்னும் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.