மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரமான கடவுச் சீட்டு விநியோகம் நிறைவுக்கு…

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் “மத்திய கிழக்கு நாடுகளுக்கு” (Middle East Countries) மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின் விநியோகமானது டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டு வருவதாக குறித்த திணைக்களம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

இதன்படி எல்லா நாடுகளுக்கும் (All Countries) செல்லுபடியாகும் கடவுச் சீட்டுகள் மாத்திரம் ஜனவரி முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.