(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுவதுடன், அதற்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்து வரும் சுதந்திரகட்சி எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க ,மக்களின் வாக்கு மூலம் பாராளுமன்றத்திற்கு வந்த தான் கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அடிபணியப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மத்திய குழுவில் உள்ளவர்களை விட பாராளுமன்றத்தில் உள்ள தனக்கு அரசியல் தெரியும் என்றும் அவர்களால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். கட்சியின் சில அரசியல் விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.