மத்திய மாகாணத்தில் சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு…

(FASTNEWS|COLOMBO) மத்திய மாகாணத்தில் அனைத்து மதுபானசாலைகளையும் இன்றைய தினம்(14) மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடம் மேற்கொண்ட பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி மதுவரி ஆணையாளர் கப்பில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.