மத்திய வங்கியினால் வழங்கப்படுகின்ற பிணைமுறிகள் குறித்த விபரம் பாராளுமன்ற குழுவிடம்

மத்திய வங்கியினால் வழங்கப்படுகின்ற அனைத்து பிணைமுறிகள் சம்பந்தமான விபரம், பாராளுமன்ற குழுவில் முன்வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

பிணைமுறிகள் சம்பந்தாக மத்திய வங்கி மீது சுமத்தப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய்யானது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நூறு நாள் அரசாங்கம் இருந்த காலத்தில் வழங்கப்பட்ட பிணைமுறிகள் சம்பந்தாக தற்போதைய பாராளுமன்றம் தேடிப் பார்க்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றில் கூறியிருந்தார்.