மத்திய வங்கியின் பிணை முறி அறிக்கைகள் மீதான விவாதம் பெப்ரவரி 8 ஆம் திகதி…

மத்திய வங்கியின் பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடாத்துவதற்கு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெனியாயவில் இன்று(27) மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆணைக்குழு அறிக்கைகள் மீது விவாதம் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்றிரவு(26) சபாநாயகரை தாம் சந்தித்து, பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டடுமாறு கூறியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அனுப்பிவைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

#rishma