இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் விடுத்த முறைப்பாட்டுக்கு இணங்க எமெடெக் ஏ ஜீ தனியார் நிறுவனத்தின் பெயரில் சந்தேகத்திற்கிடமாக வங்கிக் கணக்குகளை மேற்கொண்டமை குறித்து கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வங்கி கணக்குகள் தொடர்பில் எமெடெக் ஏ ஜீ தனியார் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றிய ஒரு பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வாக்குமூலத்தினால் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.