மத்திய வங்கியும், நிதி அமைச்சும் ஒன்றாக இருந்தால் திருடுவது கடினம்… [Video]

மத்திய வங்கியினை, நிதி அமைச்சிலிருந்து பிரித்தது கட்சியின் நிதிக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கிலா என நேற்று(29) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றான தெரண 360இல் கலந்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி தொகுப்பாளினி தில்கா வினவிய போது பிரதமர் தெரிவிக்கையில்;

“..அவ்வாறு எந்தக் கட்சியும் நிதி எடுக்கவில்லை என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இன்னும் மத்திய வங்கியும் நிதி அமைச்சும் இரண்டும் கலந்திருப்பின் அதாவது இரண்டும் ஒன்றாக இருந்தால் திருடுவது கஷ்டம்..” என தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய வங்கியின் பிணை முறி குறித்த மோசடி தொடர்பில் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முறைக்கு ஏற்ப நீங்கள் பதவி விலகி விசாரணைகளை முன்னெடுப்பது தானே நன்று என வினவிய போது… பிரதமர் பதிலளிக்கையில், தான் விலக வேண்டியது அமைச்சர் பதவியிலிருந்தா இல்லை பிரதமர் பதவியில் இருந்தா என திரும்ப தில்காவிடமே கேள்வி எழுப்பி இருந்தார் பிரதமர்.

அதுக்கு பதிலளித்த தொகுப்பாளினி தில்கா இரண்டிலிருந்தும் விலகுவது நன்றல்லவா என தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளிக்கையில், பிணை முறி குறித்து மக்கள் அறிந்தும் தன்னை மீண்டும் மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள் என தெரிவித்திருந்தார்.

குறித்த நிகழ்ச்சியின் வீடியோ…

29:28 / 51:51 எனும் வினாடிகளில் இருந்து நோக்குக…