மத்திய வங்கி ஆளுநருக்கு கோப் குழு தனியான அழைப்பாணை

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிகள் விவகாரம் குறித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள, மத்திய வங்கி ஆளுனருக்கு தனியாக அழைப்பு விடுக்க கோப் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த வாரத்தில் மத்திய வங்கி ஆளுனருக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர் இவ்வாறு தனியாக வாக்குமூலம் வழங்க அழைக்கப்படுவது இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.