மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை மூடிமறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘ஊழல் எதிர்ப்பு குரல்’ என்ற அமைப்பு இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மத்திய வங்கியின் முறிவிநியோகத்தின் போது பாரிய அளவான மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இதனை மூடிமறைக்க தற்போதைய நிர்வாகம் முயற்சிக்க கூடாது என்றும் குறித்த அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.