மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி ஆணைக்குழுவில்…

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(21) வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இதில் முதலாவதாக வாக்குமூலம் வழங்க வருமாறு தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், பிணை முறி விநியோகம் தொடர்பாக மக்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகள் என்பன பதிவு செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இந்தப் பணிகள் இன்று காலை கொழும்பு நீதிமன்ற காரியாலய வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.