மத்திய வங்கி முறிக்கொள்வனவு முறைகேடு – கோப் குழு விசாரணைகள் நிறைவுக்கு..

மத்திய வங்கி முறிக்கொள்வனவில் முறைகேடு தொடர்பிலான நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணைகள் நேற்று(08) முடிவடைந்தன.

இந்நிலையில் இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியும் தமது சாட்சியத்தை பதிவு செய்தார்.

எனினும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோப் குழுவினர் இணக்கத்தை எட்டவில்லை என்று கூறப்படுகிறது.