மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

பொலன்னறுவை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அங்கு சிகிச்சை பெறச் சென்றிருந்த வேளையிலேயே அவர் மனநலம் பாதித்த பெண்ணை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியிருப்பதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிக்குவுக்கு 50 வயது எனவும், அவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 42 வயது என்றும் தெரியவந்துள்ளது.

இன்று காலை பொலன்னறுவை ஹிங்குராக்கொடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிக்கு ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு எதிர்வரும் மாதம் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

One thought on “மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

Comments are closed.