மனநிலை காரணமாக இலங்கையுடனான போட்டிகளில் இருந்து ஹஷிம் அம்லா விலகல்…

(FASTNEWS |SOUTH AFRICA)- தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கிடையில் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இன்று(13) நான்காவது போட்டி இடம்பெறவுள்ளது.

கடைசி இரண்டு போட்டிக்கான தென்னாபிரிக்கா அணியில் ஹஷிம் அம்லா இடம் பிடத்திருந்த நிலையில், தற்போது அவரது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் கடைசி இரண்டு போட்டிக்கான அணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்குப் பதிலாக ரீசா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்