மனித உடம்புக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் மூன்று மாவட்டங்களுக்கு கடுமையான வெப்பம்..

(FASTNEWS | COLOMBO ) – நாட்டில் இன்று(11) கடுமையான வெப்பநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலைஅதிகரித்திருக்கும் என தெரிவித்துள்ள குறித்த நிலையத்தினால், முடியுமான அளவில் வெயிலில் தொடர்ந்து நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முதியோரும், சிறுவர்களும் கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.