மனுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள்…

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி குறித்த மனுக்கள் இன்று(12) முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும், இது அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பொதுத்தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் அவர்கள் கோரியுள்ளனர்.