மனைவியின் மூக்கைக் கடித்த கணவன்

தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தரு­வ­தற்கு தனது மனை­வியின் பெற்றோர் மறுத்­ததால், மனை­வியின் மூக்கை கடித்து படு­கா­யப்­ப­டுத்­திய நபர் ஒரு­வரை இந்­திய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்­தி­யாவின் உத்­தர பிர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த, 23 வய­தான சிவ்­பி­ரசாத் என்­ப­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். சிவ்­பி­ர­சாத்­துக்கும் ராஜ்­கு­மாரி எனும் யுவ­திக்கும் 2 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் நடை­பெற்­றது.

அப்­போ­தி­ருந்து, தனது மனை­வி­யிடம் வர­தட்­சணை கேட்டு சிவ்பி­ரசாத் கொடு­மைப்­ப­டுத்தி வந்­த­தாக 21 வய­தான ராஜ்­கு­மாரி தெரி­வித்­துள்ளார்.

ஆடம்­பர வாழ்க்­கைக்கு ஆசைப்­பட்ட சிவ்­ பிரசாத் தனக்கு விலை­யு­யர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்­கி­த­ரு­மாறு தனது மனை­வியை அடித்து துன்­பு­றுத்­தி­னாராம்.

இதன்கார­ண­மாக வீட்டை விட்டு வெளி­யே­றிய ராஜ்­கு­மாரி, தனது தாய் வீட்டில் தங்­கி­யி­ருந்து படித்து வந்­துள்ளார். எனினும் சிவ்­பி­ர­சாத்தின் தொல்­லைகள் முடி­ வ­டை­ய­வில்லை. ராஜ்­கு­மாரி வகுப்­புக்கு செல்­லும்­போ­தெல்லாம் வர­தட்­சணை கேட்டு தொந்­த­ரவு செய்­துள்ளார் சிவ்­பி­ரசாத்.

அண்­மையில் ராஜ்­கு­மாரி வகுப்­புக்கு சென்­று­விட்டு திரும்­பிக்­கொண்­டி­ருக்­கையில், அவரை வழி­ம­றித்த சிவ்­பி­ரசாத் வர­தட்­சணை கேட்டு தொந்­த­ரவு செய்­துள்ளார்.

தன்­னுடன் வீடு திரும்­பு­மாறும் ராஜ்­கு­மா­ரியை அவர் கட்­டா­யப்­ப­டுத்­தி­யுள்ளார். இதற்கு ராஜ்­கு­மாரி மறுத்­து­வி­டவே, அவரை தாக்­கி­ய­துடன் மட்­டு­மல்­லாமல் அவரின் மூக்­கையும் சிவ்­பி­ரசாத் கடித்து குத­றி­யுள்ளார்.

வலியால் துடித்த ராஜ்­கு­மா­ரியை அவரின் பெற்றோர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர். மருத்­து­வ­ம­னையில் அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­போ­திலும் மூக்கு கொடூ­ர­மான முறையில் சேத­ம­டைந்­துள்­ளதால், அவ­ருக்கு பிளாஸ்டிக் சத்­தி­ர­சி­கிச்சை செய்­ய­வேண்டும் என மருத்­து­வர்கள் கூறி­யுள்­ளனர்.

இது குறித்து ராஜ்­கு­மாரி கூறு­கையில், “திரு­ம­ண­மான நாளி­லி­ருந்து எனது கண­வரும் அவரின் பெற்றோர் மற்றும் உற­வி­னர்­களும் சீதனம் தரு­மாறு கேட்டு சித்­தி­ர­வதை செய்­தனர். பெருந்­தொகை பணமும் ஆடம்­பர மோட்டார் சைக்­கிளும் வேண்­டு­மென அவர்கள் கூறினர்.

ஆனால், அவற்றை கொடுக்கும் வசதி எனது பெற்­றோ­ரிடம் இல்லை. அவர்கள் என்னை தாக்­கி­ய­துடன் பணம், மோட்டார் சைக்கிள் வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தனர்.

எனது படிப்பை அவர்கள் நிறுத்­தி­ய­போது நான் எனது பெற்­றோரின் வீட்­டுக்குத் திரும்­பினேன். எனது கண­வரும் அவரின் பெற்­றோரும் எனது கல்­வியை நிறுத்தி விடு­வார்கள் என்­பதால் கண­வரின் வீட்­டுக்கு திரும்பிச் செல்ல மறுத்தேன். அதற்­காக அவர் எனது மூக்கை கடித்து என்னை இப்­ப­டி­யாக்­கி­விட்டார்” எனத் தெரி­வித்­துள்ளார்.

இச்­ சம்­பவம் இடம்­பெற்ற தினத்­தி­லேயே சிவ்­பி­ர­சாத்தை பொலிஸார் கைது செய்­தனர். இது குறித்து பொலிஸ் இன்ஸ்­பெக்டர் அஷோக் குமார் கூறு­கையில், “தனது மனைவி வகுப்­புக்கு செல்­லும்­போது அணியும் ஆடை தனக்­குப்­பி­டிக்கவில்லை என சிவ்பிரசாத் கூறினார்.

ஆனால், இச் சம்பவம் இடம்பெற்றபோது அவரின் மனைவி ட்ரவுசர், ஷேர்ட் அணிந்திருந்தார். சீதனக் கோரிக்கை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் விசாரித்து வருகிறோம். இதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.