மனைவியை கொன்ற கணவன் தற்கொலை

பிங்கிரிய-உடவல பிரதேசத்தில் மனைவியை வெட்டிக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் 36 வயதுடையவர் எனவும் அவருடைய கணவன் 52 வயதுடையவர் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறே கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ள அதேவேளை, பிங்கிரிய பொலிஸாரினாலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.