மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை!

தனது மனைவியை அடித்தும் போத்தலினால் கழுத்தில் குத்தியும் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம் திகதி ஆணைக்கோட்டை பகுதியில் யோகராசா அமுதவர்த்தினி என்பவர் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கணவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி எஸ். சுகுந்தன் யாழ். மேல் நீதிமன்றில், மனைவியை போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் என சாட்சியமளித்துள்ளார்.

எனவே, சட்சியத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட கொலைக் குற்றத்திற்கு எதிராக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. .