மன்னார் முஸ்லிம் பள்ளிவாயல் அருகில் கிளைமோர் குண்டு…

(FASTNEWS | COLOMBO) – யுத்த காலத்தில் L.T.T.E அமைப்பினால் உபயோகிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் 03Kg எடையுடைய கிளைமோர் குண்டு ஒன்று மன்னார், பெரியகடை முஸ்லிம் பள்ளிக்கு அருகில் உள்ள குப்பையில் இருந்து நேற்று(06) மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் பள்ளிக்கு அருகில் மன்னார் நகரசபை ஊழியர்கள் சீர்திருத்தப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த வேளையிலேயே குறித்த கிளைமோர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குறித்த குண்டு செயலிழக்கச் செய்வதற்கு மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மன்னார் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

– வன்னி ரொமேஷ் மதுஷங்க…