கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தாம் மன நிறைவுடன் ஓய்வு பெற்றுக் கொள்வதாக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
தலைமைப் பதவியை நீண்ட காலம் வகிக்காமை வருத்தமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தலைமைப் பதவியில் நீண்ட காலம் நீடித்திருந்தால் இந்தளவு ஓட்டங்களை குவித்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற போது தாம் 200% தம்மால் ஆனதை அணிகளுக்காக வழங்கியுள்ளதாகவும் அது திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 – 28 ஆண்டுகளாக கிரிக்கெட்டுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாகவும், அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் யூனிஸ் கான் மேலும் தெரிவித்துள்ளார்.