மரக்கறி, பழ வகை மற்றும் தேங்காய் எண்ணெய் தொடர்பிலான பரிசோதனை தகவல்கள் பொது மக்களுக்கு..

(FASTNEWS | COLOMBO) – மரக்கறி, பழ வகை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ள இரசாயன மற்றும் இரசாயன பயன்பாடு பற்றிய பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பில் பொது மக்களை தெளிவூட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மக்கள் உணவுப் பயன்பாட்டில் தகுந்த மற்றும் தகுதியற்ற என்பவை தொடர்பில் பரீட்சிக்க வேண்டும் எனவும், உணவுப் பாதுகாப்பு பிரிவின் துணை அத்தியட்ச பணிப்பாளர் லக்ஷ்மன் கம்லத் மேலும் தெரிவித்துள்ளார்.