மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. மரண தண்டனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என இலங்கை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் சகலவிதமான மரண தண்டனையையும் எதிர்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.மரண தண்டனை மனித உரிமை மீறலாகும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மரண தண்டனைகளின் மூலம் குற்றச் செயல்கள் தடுக்கப்பட்டதாக எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். வறியவர்கள், தலித்கள், சிறுபான்மை இனத்தவர்கள் போன்றவர்களே அதிகளவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.