மரண தண்டனை பெயர்ப் பட்டியலில் பெண்ணொருவரின் பெயர்..- வெலே சுதா உள்ளிட்டோர் நீக்கம்.. இதோ பெயர்ப் பட்டியல்….

அண்மையில் அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வர்த்தகர்களின் விபரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் ஒன்று நீதியமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

மரண தண்டணை பெயர் பட்டியலில் முதலாவது பெயரே ஒரு பெண்ணுடையது என அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெயர் பட்டிலில் உள்ளவர்களில் நால்வர் பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னணி போதைப் பொருள் மன்னர்களான வெலே சுதா மற்றும் தர்மராஜா சுதேஷ் எனும் பெயரையுடைய சூசை ஆகியோர் தூக்குத் தண்டனைக் கைதிகளாக பெயரிடப்பட்டுள்ள 18 பேரின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த டனசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களுக்காக மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளதனால் இவர்களைப் பட்டியலில் உட்படுத்தவில்லையெனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக்கைதிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.