மரண தண்டனை வழங்குவது ஏற்றுகொள்ள முடியாது – வத்திக்கான் திருச்சபை…

எந்தச் சூழலிலும் மரண தண்டனை வழங்குவது தவறு என்று, வத்திக்கானில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண தண்டனை குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டை வத்திக்கான் மாற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மரண தண்டனை என்பது ஒரு தனி மனிதரின் வரம்பு மீறக்கூடாத விவகாரங்கள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மீதான தாக்குதல் என்று வத்திக்கான் கூறியுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க பாடுபடுவோம் என்றும் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போப் பிரான்சிஸின் மரண தண்டனை தொடர்பான கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய போதனைகளில் ஒன்றான மறைக்கல்வி திருத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் மட்டுமே மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கத்தோலிக்க திருச்சபை முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.