(FASTNEWS | COLOMBO) – மரங்களை வெட்டும் சென்சோ இயந்திரங்கள் இறக்குமதி செய்வதை வர்த்தமானி அறிக்கை மூலமாக தடை செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், புதிய தச்சு வேலைத் தளங்களை பதிவு செய்வதை நிறுத்துவதற்கும் மர ஆலை உரிமையாளர்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “பேண்தகு வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைதலைக் குறைத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் நேற்று(06) ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த இந்த விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் இன்னும் ஐந்து வருடங்களில் மர ஆலைகளை தடை செய்வதாகவும், மர ஆலை உரிமையாளர்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்த நிலையில், குறித்த கருத்தினால் மரத் தளபாடங்களது விலைகள் அதிகரிக்கும் அவதானம் நிலவுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.