இலங்கை பொலிஸார் பயன்படுத்தும் வகையில் தடயவியல் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைக்க அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைகளில் துரிதத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே குறித்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுதந்தரவின் ஆலோசனையின் பேரிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தடயவியல் ஆய்வுக்கூடத்தில் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மரபணு பரிசோதனைகளும் இந்த ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.