அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA), சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக முன்னெடுத்துள்ள பாத யாத்திரையின் காரணமாக மருதானையை அண்டிய வீதிகளில் வாகன நெரிசல் நிலவுவதாக காவற்துறை தெரிவிக்கின்றது.
இந்நிலையில் , குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர் அறிக்கையொன்றை வௌியிட்டு பொதுமக்களை கோரியுள்ளனர்.