அரச மற்றும் மாகாண சபை மருத்துவமனைகளிலும், ஏனைய சுகாதார நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியாக இன்று(10) முதல் ஆய்வுகள் இடம்பெறவுள்ளன.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது செயற்பாட்டில் உள்ள தகவல் முகாமைத்துவ கட்டமைப்புக்கு அவசியமான தரவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தக் குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக விடுமுறை பெற்றுள்ள மருத்துவர்கள் பற்றியும் இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ அதிகாரிகளின் தகவல்கள் பற்றிய தேசிய ஆய்வு தினம் மார்ச் 24 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாடளாவிய ரீதியாக குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.