மருத்துவ பீட மாணவர்கள் உடனடியாக விரிவுரைகளுக்கு திரும்புமாறு கோரிக்கை..

அரச பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் மருத்துவ பீட மாணவர்கள் உடனடியாக விரிவுரைகளுக்கு திரும்ப வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் மாணவர்களை கோரியுள்ளது.

குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“..அரசால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்துக்கு பின்னரும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதும், உண்ணாவிரத போராட்டங்கள் மேற்கொள்வதிலும் பயனில்லை.

இலங்கை மருத்துவ சபையும் பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவ பீடங்களும் உயர் தரத்துடன் செயற்படுகின்றன. இவ்வாறிருக்கும் போது பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தும் விதத்தில் மாணவர்கள் செயற்படுவது கண்டிக்கத்தக்கதாவும்.

அவர்களின் பெற்றோரும் இதற்குத் துணை நிற்பது மனவருத்தத்திற்குறியதாகும். தற்போது அரச பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவபீட மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு செல்லாமையால் இந்த ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவபீட மாணவர்கள் விரிவுரைகளுக்கு உடன் திரும்ப வேண்டும்..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

E-(reeshma)