மருந்தகங்களது பதிவினை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள மருந்தகங்கள் குறித்த தொகையானது தேசிய ஔடதம் மற்றும் மருந்து ஒழுங்கு முறை ஆணையத்தினால் பரீசிலித்து பதிவு செய்வது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை ஒசுசல விற்பனையாளர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.