மருந்தக உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து சில்லரை மருந்தக உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

விசேட வைத்தியர் ஒருவரின் வலிதான மருந்து சீட்டு இல்லாமல் குளோரோகுயின் “Chioroquine” மற்றும் கைரொக்சிகுளொரோகுயின் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் பிரிவு 131 ன் கீழ் வழக்குத் தொடப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.