தேசிய மருந்து ஒழுங்கு முறை ஆணையம் மருந்துகளுக்கான நிர்ணய கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பாக அறிவிக்கும் வரை, சந்தையில் மருந்துகளின் விலையைக் குறைப்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது சந்தையில் மருந்துகளின் விலையை 85 வீதமாக குறைப்பதற்கு மருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
எனவே, மருந்து விலைகள் தொடர்பாக பரீசீலனை செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ள அறிக்கையினையடுத்து, மருந்துகளின் விலையை நிரந்தரமாக குறைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது சந்தையில் ஆயிரத்திற்கும் அதிகமான மருந்துகள் விற்கப்படுவதாக அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.