இன்று நள்ளிரவு முதல் 47 வகையான மருந்துகளது விலைகள் குறைப்பு.

மருந்து வகைகளில் 47 வகையான மருந்துகளுக்கான விலை குறைப்பு தொடர்பாக வர்த்தமானியானது இன்று(21) நள்ளிரவு வௌியிட எதிர்பார்த்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நீரிழிவு, இரத்தச் சோகை உள்ளிட்ட சில நோய்களுக்கான மருந்துகள் உட்பட 48 வகையான மருந்துகளுக்கான விலை குறைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.