கிளிநொச்சி ஆனந்தநகர் பகுதியில் பல நாட்களாக மாலை வேளைகளில் வீதியால் சென்று வரும் பெண்களுக்கு தனது நீள் காற்சட்டையின் சிப்பைத் திறந்து மர்ம உறுப்பை காட்டி வந்த நபரை பிரதேச இளைஞர்கள் பிடித்து நையப்புடைத்து கிளிநொச்சி பொலீஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.
திங்கள் மாலை இளைஞர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட நபர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது கிளிநொச்சி பொலீஸாரினால் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டு சிகிசைப்பெற்று வருகின்றார்.
பிடிப்பட்ட நபர் தனது பெயர் எஸ்.தேவன் என்றும் தர்மபுரம், விசுவமடு, வவுனியா, என முகவரியை முன்னுக்கு பின் முரணாக தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு குறித்த நபரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகள் காணப்பட்டதாகவும் இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
பல நாட்களாக மாலை நேரங்களில் உள் வீதிகளில் தனது உந்துருளியை நிறுத்திவிட்டு தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களிலிருந்து வீடு நோக்கிச் செல்லும் பெண்களுக்கு தனது நீள் காற்சட்டையை கழற்றியும் அல்லது சிப்பை திறந்து மர்ம உறுப்பை காட்டியும் அநாகரீகமாக குறித்த நபர் நடந்துகொண்டுள்ளார். அதனை பல பெண்கள் வெட்கம் காரணமாக வெளியில் தெரிவிக்காது வந்த நிலையில் அவரது சேட்டைகள் அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் திங்கள் மாலை தனது வீடு நோக்கி சென்ற யுவதி ஒருவருக்கு வழமை போன்று தனது செயலை மேற்கொண்ட போது குறித்த யுவதி தனது சகோதரனுக்கு தொலைபேசி மூலம் தகவலை தெரிவிக்க அவர் மேலும் சில இளைஞர்களுடன் குறித்த இடத்திற்கு சென்ற போது இந்த நபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார் இதன் போதே இளைஞர்களால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கிளிநொச்சி பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் கிசிசை பெற்று வரும் குறித்த நபரிடம் பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த நபர் கிளிநொச்சியில் பல இடங்களி;லும் தன்னை புலனாய்வாளன் எனக்குறிப்பிட்டு பல மோசடி சம்பவங்களிலும் ஈடுப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் தனது 14 வயது மகளை மதுபோதையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தை பொலீஸாரினால் கைது செய்யப்பட்டதோடு சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் கடந்த வாரம் உதயநகர் கிராமத்தில் இருந்து கூலி வேலைக்காக சென்ற நபர் வீட்டில் தனிமையில் இருந்த 12வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளும் வகையில் கட்டிப்பிடித்த நிலையில் சிறுமி கூக்குரல் இட்டு கத்திய போது பிரதேச இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குறித்த நபரை பிடித்து கடுமையாக நையப்புடைத்து அவரது மனைவியை அழைத்து கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்