(FASTNEWS | COLOMBO) – மரக்கன்றொன்றை நட்டு சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து இலங்கையர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வருட சிங்கள – தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் இணைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மர நடுகைக்கான சுப நேரமான இன்று(15) முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி இந்த மரக்கன்றை நடுவது நல்லாதாகும்.
இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.