மறிச்சுக்கட்டிப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றினை எட்ட மூவர் கொண்ட சுயாதீனக் குழுவொன்று நியமிக்க உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபேயகோன் தெரிவித்துள்ளார்.
முசலி பிரதேசத்தில் மாவில்லு வன பாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று(16) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதியின் செயலாளர்;
ஜனாதிபதியுடன் கலந்து ஆராய்ந்து இக்குழுவின் கால எல்லை பற்றி அறிவிப்பதாகவும் குறித்த இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்காது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாகவும் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட்ட மக்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது எனவும் இவர்களுக்கு மேலும் அநீதி இழைக்கப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி செயலாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.