தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டண கட்டுப்பாடுகள் மறுஅறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, குருதிப் பரிசோதனைக்கு ஆகக் கூடிய தொகையாக 250 ரூபாவும், டெங்கு தொற்று நோய்த் தாக்கம் தொடர்பான பரிசோதனைக்கு 1000 ரூபாவும் அறவிடப்பட வேண்டும் என அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.