மறைந்த சோபித தேரர் குறித்து பிரேத பரிசோதனை தேவையில்லை – நீதிமன்றம்

மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் சடலம் தொடர்பாக மீண்டும் பிரேதப் பரிசோதனையோ, திடீர் மரண விசாரணையோ மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட விஷேட வைத்திய குழுவினரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உடுவே தம்மாலோக தேரர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவால் இந்த விஷேட குழு நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழு இன்று(07) நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து, கருத்து வௌியிட்ட போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.