மற்றொரு சிறுவனை மது குடிக்க வைத்த கொடுமை: Whats App வீடியோவால் பரபரப்பு

4 வயது சிறுவனை இளைஞர்கள் மது குடிக்க வைத்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் மற்றொரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத

கடந்த சிலநாட்களுக்கு முன் திருவண்ணாமலை அருகே சிறுவனை மதுகுடிக்க வைத்த சம்பவம் வாட்ஸ் அப் மூலம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்குள், தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.

வாட்ஸ்அப்பில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் பேசும் நபர்கள் அனைவரும் மதுரை தமிழில் பேசுகின்றனர்.

வாலிபர்கள் சிலர் மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில், மூன்று வயது சிறுவன் ஒருவனை உட்கார வைத்து, அவனுக்கு மதுபானத்தை டம்ளரில் ஊற்றுகின்றனர்.

பின்னர், ‘தண்ணிதான் குடிங்க பிரண்ட், குடிங்க பிரண்ட்‘ என்று உசுப்பேற்றுகின்றனர்.

வேறுவழியின்றி சிறுவன் அப்படியே செய்கிறான். அதை சில வாலிபர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.

மேலும், இவன் அப்பன் பெரிய குடிகாரன். அவனை மாதிரியே குடிக்கிறான் பார்’ என்று சுற்றி நிற்கும் வாலிபர்கள் கிண்டல் செய்கின்றனர்.

இந்த வீடியோ காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

[youtube url=”https://www.youtube.com/watch?v=NrprTRt5ofE&feature=youtu.be” width=”560″ height=”315″]