தற்போதைய அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அது இலகுவான காரியம் அல்ல என்று தற்போது புரிந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கூறியுள்ளார்.
இன்று(15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதை மறைப்பதற்காக தற்சமயம் விஷேட அபிவிருத்தி ஏற்பாடு என்ற பெயரில் சட்டமூலம் ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும்,
குறித்த இந்த சட்டமூலம் மிகவும் பயங்கரமானது என்றும், இது தொடர்பில் எந்தவொரு ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கு அமைச்சர் ஒன்றை நியமிப்பதால், பல அமைச்சுக்களை அந்த அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், இதனூடாக அபிவிருத்தி உத்திகள் மற்றும் மீன்பிடித்துறை போன்ற சில அமைச்சர்களின் பதவிகள் பறிபோகும் நிலை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இதனூடாக புதிய நீதிமன்றம் ஆரம்பமாவதுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்று ஜீ.எல் பீரிஸ் கூறியுள்ளார்.
இதனூடாக ஊழல் மோசடிகளுக்கு அழைப்பு விடுக்கும் நடவடிக்கை இடம்பெறும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.