மலேசியாவின் சா அலாம் நகரிலுள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றிற்குள் இலங்கையர் அனுமதியின்றி உட்பிரவேசிக்க முயன்ற போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் போது இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
கொலைச் சம்பவம் தொடர்பில் 07 சந்தேக நபர்களை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். 20இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கொலை செய் யப்பட்டுள்ள இலங்கையர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.