மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது பதவி இராஜினாமா…

ரஷ்யா நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்பட்ட மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று(07) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மலேசியா மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் பதவியேற்ற சுல்தான் முஹம்மது ‘மன்னர் ஐந்தாம் முஹம்மது’ என அந்நாட்டவர்களால் குறிப்பிடப்படுகிறார்.

உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்ளப் போவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னர் விடுப்பு எடுத்திருந்தார். அதன் பின்னர், ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ‘மாஸ்கோ அழகி’ பட்டம் பெற்ற இரு பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.