தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று(22) மாலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரத ஹட்டன் – ரொசல்ல பகுதிகளுக்கு இடையில் புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது புகையிரத பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.