கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே புகையிரதம் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
பண்டாரவளை மற்றும் கினிகம புகையிரத நிலையங்களுக்கு இடையே பிங்கேய பகுதியில் நேற்று(09) மாலை 5.30 மணியளவில் குறித்த புகையிரதம் தடம்புரண்டதுடன், இன்று(10) அதிகாலை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்க விருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.