மலையக புகையிரத பாதையில் இஹல கோட்டே மற்றும் பலனவிற்கு இடையிலான புகையிரத பாதையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக புகையிரத போக்குவரத்து நடவடிக்கை ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலை வழமைக்கு திரும்பும் வரை மலையக புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிர கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கவிருந்த கடுகதி புகையிரதம் மற்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்னும், நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிண்மடலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.