துளையிலிருந்து கொழும்பு வரை சென்ற ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகமையில் 120 என்ற கட்டைப்பகுதியில் நேற்று (03) மாலை 5.30 மணியளவில் குறித்த ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் பாதையை சீரமைத்து வருவதாகவும் இன்று (04) காலை 10 மணியளவிற்குள் சீரமைத்து, மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.