மலையக ரயில் சேவையானது மதியத்திற்குள் முழுமையாக வழமைக்கு…

ரயில் தடம்புரண்டதன் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவையானது தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ​நேற்று(23) மாலை கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டது.

எனினும், புகையிரத சேவையை இன்று(24) மதியத்திற்குள் முழுமையாக வழமைக்கு கொண்டு வர முடியும் என நானுஓயா புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

#rishma