மலையேறும் வீரர்கள் பனிப்பாறைகளில் சிக்கி உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) உலகப் புகழ்பெற்ற 3 மலையேறும் வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

கனடாவில் உள்ள அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லையில் உள்ள பனி மலையில் மலையேறும் பயிற்சியில் 3 வீரர்கள் ஈடுபட்டனர்.

உரிய பாதுகாப்பு உபகரண வசதிகளுடன் மலையேறிய இவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

மூவரும் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக இவர்களின் மரணத்துக்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.