நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நாளை மறுதினம் முதல் குறைவடைய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று மாலை வடக்கு மற்றும் ஏனைய மாகாணங்களில் மழை பொழிய கூடும் என எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்கள் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தொடை மாவட்டத்தில் மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதவேளை, இடியுடன் கூடிய மழை பொழியும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்றும் வீச கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது